புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அனுமதி!

education_ministryகல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்கள், இம்மாதம் 20ஆம் திகதி உள்வாங்கப்படவுள்ளதாக ஆசிரியர் கல்வி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடளாவிய ரீதியில் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 303 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் உரிய அறிவுறுத்தல் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அனுமதி பெற்ற மாணவர்களின் விபரங்கள் கல்வியமைச்சின் கல்வியியல் கல்லூரி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இம்முறை கடந்த வருடத்தை விட கூடுதலான மாணவர்கள் கல்வியியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படைக் கல்விச் செயற்பாடுகள் தொடர்பான பாடத்திட்டங்களும் கற்கைநெறியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கற்கை நெறிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பத்து தினங்களுக்கு நிறுவன ரீதியான ஆரம்ப பயிற்சிகள் வழங்கப்படும்” என ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார மேலும் தெரிவித்தார்.

முகப்பு
Selva Zug 2