வெள்ளி, 23 ஜூன் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance
Eluchikuyil

விக்கி-சத்தியலிங்கம் அணிக்கிடையே மோதல்!  பொலிஸார் குவிப்பு

ஊழல் மோசடி குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக வவுனியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் குறித்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞர் குழுவொன்று திடீரென பிரவேசித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கலைந்துசெல்லுமாறு கோரி கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.1

இந்நிலையில், அப்பிரதேசத்தில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.2

இவ்வாறு வருகை தந்த இளைஞர்கள் தம்மை பொது அமைப்புக்களின் ஒன்றியத்தார் என அடையாளப்படுத்தியதோடு, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். அத்தோடு, விசாரணையில் சத்தியலிங்கம் பங்கேற்க வேண்டும் எனவும் கோரி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.3

வடக்கு அமைச்சர்கள் விவகாரம் வடக்கு மாகாண சபையில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், வடக்கு முதல்வருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.4

முகப்பு
Selva Zug 2