ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

அரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய மலையக கட்சிகள்!

அரசியல் கைதிகள் விவகாரத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிடப்பினில் போட்டுள்ள நிலையினில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள, மலையக அரசியல் தலைமைகள் முற்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கண்டி, தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன், கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், சனிக்கிழமை சந்தித்ததுடன், கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.radhakrishnan-prisio
தும்பற சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யுத்தம் முடிவடைந்த பின்னர், விடுதலை, புனர்வாழ்வளிப்பு என்ற பெயரில் பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், தாம் இன்னும் சிறைவாசம் அனுபவித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தம்மீது எட்டுமுதல் 10 வரையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்குகளின் தீர்ப்புகள் ஒவ்வொருவிதமாக அமைந்துள்ளதால், தாம் இன்னும் எவ்வளவு காலம் சிறை வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும் என்று தெரியாத நிலையிலேயே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களது நிலைமை தொடர்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபகஸ், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடி, விடுதலையைப் பெற்றுத்தருவோம் என வாக்குறுதியளித்துள்ளதாக தெரியவருகின்றது.radhakrishnan-prision-190
இதேவேளை புனர்வாழ்வை அடிப்டையாகக் கொண்டு, வழக்குகளை துரிதப்படுத்தி அல்லது பொதுமன்னிப்பின் கீழ், தம்மை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு, அரசியல் கைதிகள் எம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அத்துடன், சிறைச்சாலையில் இருக்கும்வரை தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அரசியல் கைதிகள் கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

முகப்பு
Selva Zug 2