வியாழன், 14 டிசம்பர் 2017
Selva Zug 2

லண்டனில் வாகன தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு

லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் பகுதியில் பாதசாரிகள் மீது வான் மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஃபின்ஸ்பரி பார்க் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் ரமழான் மாத தொழுகையை முடித்துக்கொண்டு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.20 மணியளவில் வெளியேறியவர்களை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.london-attack

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற வான், ஃபின்ஸ்பரி பார்க்கிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், தொழுகையை முடித்துவிட்டு வெளியேறியவர்கள் மீது மோதியதை தான் கண்ணுற்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை.

ரமழான் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத் தாக்குதல் சம்பவமானது அப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகப்பு
Selva Zug 2