ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

சிட்னியில் நினைவுகூரப்பட்ட தமிழர் இனவழிப்பு நினைவுநாள்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. இன்று 18 – 05 – 2017 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு வென்வேத்வில் றெட்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தேசியக்கொடியேற்றலுடன் தொடங்கிய நினைவு நிகழ்வில் மரணித்துப்போன உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு அனைவரும் வரிசையாக சென்று மலர்வணக்கம் செலுத்தினர்.

australia sydney may 18 -3

இதனைத்தொடர்ந்து இனவழிப்பு நினைவுநாளில் கவனயீர்ப்பு நிகழ்வாக ஐந்து இளையோர்கள் றொக்வுட் தமிழர் நினைவிடத்திலிருந்து நடைபவனி மேற்கொண்டு மண்டபத்தை வந்தடைந்த இளையோர் ஒருவர் நடைபவனியின் நோக்கத்தை எடுத்துக்கூறி தொடர்ந்து நாம் போராடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கிறான்வில் தொகுதியின் மாநிலஅவை உறுப்பினர் Julia Finn கருத்துரை வழங்கினார். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அடக்குமுறைகளை விளங்கிக்கொள்வதாகவும் இன்னமும் தமிழர்களுக்கான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றது எனவும் அதற்காக தான் குரல்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

australia sydney may 18 -2

தமிழ்ச்செயற்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி சாம்பவி உரையாற்றும்போது, எமக்கான விடுதலையை பெற்றுக்கொள்வதற்கு நாம்தான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தமிழர்களின் தேசம் விடுதலை பெறும்வரை தமிழர்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்கவேண்டும் எனவும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தெரிவித்தார்.

australia sydney may 18 -8

தொடர்ந்து தமிழ்நாட்டு எழுத்தாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செயற்பாட்டாளருமான முத்துக்கிருஸ்ணன் கருத்துரை வழங்கினார். அவர் தனதுரையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அன்றைய காலத்தில் தான் அறிந்திருக்கவில்லை எனவும் ஊடகங்கள் அவற்றை வெளியில் கொண்டுவரவில்லை எனவும் குறிப்பிட்டார்.

australia sydney may 18 -7

அத்தோடு தமிழ்நாட்டிலுள்ள 80000 மேற்பட்ட ஈழத்து தமிழர்கள் அகதிகளாக அன்றி அத்துமீறியவர்களாகவே கணிக்கப்பட்டு வைத்திருக்கப்படுகின்றார்கள் எனவும் அவர்களது விடிவிற்காகவும் நாங்கள் உழகை;கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

australia sydney may 18 -6

இறுதியாக தேசியக்கொடியிறக்கலை தொடர்ந்து வணக்கநிகழ்வுகள் மாலை 9 மணிக்கு நிறைவுபெற்றது.

australia sydney may 18 -5

australia sydney may 18 -4

முகப்பு
Selva Zug 2