திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

எட்டாம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் மிகவும் உருக்கமான முறையில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நினைவுகூரப்பட்டது, பேர்த் பாலமுருகன் ஆலய வெளி மண்டபத்தில் நிகழ்ந்த  அனுஷ்டிப்பில் மக்கள் உணர்வோடு பங்குகொண்டிருந்தனர்.

ausrelia may 18-1

மேற்கு அவுஸ்திரேலிய தமிழர் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வை  திரு  சி . நிமல் தொகுத்து வழங்கினார். மாலை 7 . 30 க்கு அவுஸ்திரேலிய , மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றலோடு நிகழ்வு ஆரம்பமானது , தொடர்ந்து இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்து உறவுகளுக்குமாக பொதுச்சுடரேற்றப்பட்டது.

ausrelia may 18-2

அத்தோடு மக்கள் மலர்தூவி , விளக்கேற்றி , மரணித்த உறவுகள்  ஆன்ம ஈடேற்றம் பெற அஞ்சலி செய்தார்கள்.
தமிழினவழிப்பு நினைவுநாள் உரையினை  திரு . இளையவன்னியன் நிகழ்த்தினார்.  எமது மக்கள் அனுபவித்த பெருந்துயரை நடனத்தின் மூலம் காட்ச்சிப்படுத்திய குழுநடனத்தை தொடர்ந்து கொடியிறக்கத்தோடு நிகழ்வு நிறைவுபெற்றது.

ausrelia may 18-4

ausrelia may 18-5

ausrelia may 18-6

ausrelia may 18-7

ausrelia may 18-8

ausrelia may 18-9

முகப்பு
Selva Zug 2