வியாழன், 14 டிசம்பர் 2017
Selva Zug 2

முள்ளிவாய்க்காலில் த.தே.ம.முன்னணியின் ஏற்பாட்டில் இனவழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா  அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் 8ஆஅம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பி.ப 3.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா அசினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது மக்களுக்கு சுரரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
பிரதான சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயார் ஒருவர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து போரில் உறவினர்களை இழந்த பொது மக்களும் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும்  கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள்,  செயற்குழு உறுப்பினர்களும் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீஞானேஸ்வரன், அருட்தந்தை புவி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்   கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

உரைகள் நிறைவடைந்த பின்னர் யுத்த காலத்தில் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கொடிய பொருளாதாரத் தடை காரணமாக இறுதி யுத்த காலத்தில் அதனை மக்கள் உயிர்வாழ்வதற்காக தண்ணீரில் அரிசிக் குருணல்களை போட்டு கொதிக்க வைத்து குழந்தைகளுக்கும் உணவாகக் கொடுத்து தாமும் அதனை உண்டு உயிர் பிழைத்தனர். அந்த கொடிய வாழ்க்கையை மீளவும் நினைவுபடுத்தும் வகையில் தண்ணீரில் அவிக்கப்பட்ட அரிசிக் கஞ்சி வழங்கப்பட்டது. உளவுத் துறையினரது அதி உச்ச கண்காணிப்புக்கள்இ புகைப்படம் எடுப்புக்கள்இ மரணப்பார்வைகள் மத்தியில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு நடந்தேறியது. TNPF Mullivaikal 01 TNPF Mullivaikal 02 TNPF Mullivaikal 03 TNPF Mullivaikal 04 TNPF Mullivaikal 05 TNPF Mullivaikal 06 TNPF Mullivaikal 07 TNPF Mullivaikal 08 TNPF Mullivaikal 09 TNPF Mullivaikal 10 TNPF Mullivaikal 11 TNPF Mullivaikal 12 TNPF Mullivaikal 13 TNPF Mullivaikal 14 TNPF Mullivaikal 15 TNPF Mullivaikal 16 TNPF Mullivaikal 17 TNPF Mullivaikal 18 TNPF Mullivaikal 19 TNPF Mullivaikal 20

முகப்பு
Selva Zug 2