வியாழன், 14 டிசம்பர் 2017
Selva Zug 2

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பின் அணிதிரண்ட மக்கள்!

பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலும், பிரித்தானியாவின் வடகோடியில் உள்ள ஸ்கொட்லாந்து தேசத்திலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

இன்று மதியம் 2:00 மணிக்கு இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாகத் தமிழீழத் தேசியக் கொடி, பிரித்தானிய தேசியக் கொடி ஆகியவை ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பேரணியில் உணர்வெழுச்சியுடன் பெருமளவான பிரித்தானியவாழ் தமிழீழ உறவுகள் பங்கேற்று, முள்ளிவாய்க்காலில் மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும், எதிரியால் கொன்றுகுவிக்கப்பட்டும், காணாமல் போகச்செய்யப்பட்டும் இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட 146,679 உறவுகளுக்கும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சந்நிதியில் சுடரேற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களான நியூட்டன், லக்சன், மற்றும் மருத்துவர் மாதவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மேடை நிகழ்வுகளில், கருத்துரைகளை எழுத்தாளரும், மூத்த போராட்டவாதியுமான ச.ச.முத்து, நீதிமன்ற சட்டவாளர் சிவாணி, சிற்றி பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி மதுரிகா இராசரத்தினம், இறுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறையில் போராளியாக செயற்பட்ட அருண்மாறன் ஆகியோர் வழங்கினார்கள். அத்தோடு தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாகக் குரலெழுப்பி வரும் தொழிற்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வேட்பாளருமான ஜொவன் ரையன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட செய்தியும் மேடையில் வாசிக்கப்பட்டது.

இப் பேரணியில் மயூரன் சதாசிவம் அவர்களின் எழுச்சி கானமும், விக்னா, வசந்தகுமாரி, சோபனா, துசிகாந்தி ஆகியோரின் எழுச்சிக் கவிதைகளும், குஜியந்தன், நிரஞ்சன் ஆகிய நடனக் கலைஞர்களின் முள்ளிவாய்க்கால் மண் வணக்க நடனமும் இடம்பெற்றன.

எழுச்சிப் பேரணியின் நிறைவில் சிறீலங்கா அரசின் முன்னாள், மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் சட்டங்களில் கீழ் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் அல்லது தமிழின அழிப்பை விசாரணை செய்வதற்கென அமைக்கப்படும் சிறப்பு நடுவர் மன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்திப் பிரித்தானியப் பிரதமருக்கான மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

இன்றைய பேரணியை முன்னிட்டு, தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஊடாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு செய்தியொன்றை அனுப்பி வைத்த பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின், தமக்கு நிகழ்ந்த கொடூரங்களைத் தொடர்ந்தும் தமிழர்கள் நினைவுகூருவது முக்கியமானது என்று குறிப்பிட்டிருந்தார்.

இது இவ்விதம் இருக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் பிரித்தானியாவின் வடகோடியில் உள்ள ஸ்கொட்லாந்து தேசத்தின் முக்கிய நகரமான கிளாஸ்கோவில் இன்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் பேரணியிலும் பெரும் எண்ணிக்கையிலான ஸ்கொட்லாந்துவாழ் தமிழீழ உறவுகள் பங்கேற்று, முள்ளிவாய்க்காலில் வீரச்சாவெய்திய மாவீரர்களுக்கும், மடிந்த மக்களுக்கும் வணக்கம் செலுத்தினர். UK Mullivaikal 01 UK Mullivaikal 02 UK Mullivaikal 03 UK Mullivaikal 04 UK Mullivaikal 05 UK Mullivaikal 06 UK Mullivaikal 07 UK Mullivaikal 08 UK Mullivaikal 09 UK Mullivaikal 10 UK Mullivaikal 11 UK Mullivaikal 12 UK Mullivaikal 13 UK Mullivaikal 14 UK Mullivaikal 15 UK Mullivaikal 16 UK Mullivaikal 17 UK Mullivaikal 18 UK Mullivaikal 19 UK Mullivaikal 20 UK Mullivaikal 21 UK Mullivaikal 22 UK Mullivaikal 23 UK Mullivaikal 24 UK Mullivaikal 25 UK Mullivaikal 26 UK Mullivaikal 27 UK Mullivaikal 28 UK Mullivaikal 29 UK Mullivaikal 30 UK Mullivaikal 31 UK Mullivaikal 32 UK Mullivaikal 33 UK Mullivaikal 34 UK Mullivaikal 35 UK Mullivaikal 36 UK Mullivaikal 37 UK Mullivaikal 38

முகப்பு
Selva Zug 2