புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

உறுதியான தலைமைத்துவத்தை ஏற்படுத்தவே முன்கூட்டிய தேர்தல்!

May-theresaபிரெக்சிற் பேச்சுவார்த்தையை முன்னிட்டு வலுவான மற்றும் உறுதியான தலைமைத்துவத்தை நாட்டில் ஏற்படுத்தும் வகையிலேயே பிரித்தானிய பொதுத் தேர்தலை முன்கூட்டி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

வடக்கு லண்டனில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் குடியேற்றவாசிகளின் வருகையை நிலையாகப் பேண வேண்டும் என்றும், அந்தவகையில் ஓராண்டில் நாட்டுக்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக பேணவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குடியேற்றவாசிகளின் வருகையை கட்டுப்படுத்துவது தொடர்பில் முதன் முதலில் கடந்த 2010ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனினால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதனை ஒருபோதும் அடைய முடியவில்லை. அண்மைய தரவுகளின் அடிப்படையில் ஆண்டின் நிகர குடிபெயர்வு 2 லட்சத்து 73 ஆயிரமாக காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

முகப்பு
Selva Zug 2