வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்: ஐ.நா!

unவடகொரியாவின் உறுதியற்ற செயற்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையின் பொதுக்கூட்டத்தின் போது, வடகொரியாவை கடுமையாக எச்சரிக்கும் வகையிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வடகொரியாவின் சட்டவிரோதமான ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் பெரும் பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வடகொரியா, கொரிய தீபகற்பத்தையோ, அண்டை நாடுகளையோ அச்சுறுத்தும் வகையில் எத்தகைய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதனை செய்யக்கூடாது. ஐ.நா.வின் எச்சரிக்கையை பொருட்படுத்தாது வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் ஏனைய நாடுகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது.

பிற நாடுகளின் ஸ்திரத்தன்மையை குலைக்கின்ற வகையில் வடகொரியாவின் நடத்தை இனியும் அமைந்தால் அந்நாட்டின் மீது மேலும் புதிய தடைகள் திணிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2