திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

பலஸ்தீன்- இஸ்ரேல் இடையே அவசர பேச்சுவார்த்தைக்கு சீனா அழைப்பு!

chi-பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் மக்களின் நலனை கருத்திற் கொண்டு, இரு தரப்பிற்கும் இடையில் வெகு விரைவில் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

மத்தியகிழக்கு பிரச்சினை தொடர்பிலான ஐ.நா. பாதுகாப்பு சபையின் மாதாந்த கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில் ஐ.நா. சபையின் சீனாவிற்கான நிரந்தர பிரதிநிதி கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளிடையிலான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.

பேச்சுவார்த்தைகளின் மூலமே திருப்புமுனைகளை ஏற்படுத்த முடியும். தொடர் பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு தரப்பிற்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை படிப்படியாக அதிகரிக்க முடியும். இதன்மூலம் இறுதி தீர்வொன்றை எட்ட முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

முகப்பு
Selva Zug 2