செவ்வாய், 25 ஏப்ரல் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance
may-1st

இலஞ்சம் வழங்க முயற்சி: தினகரனுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

dinakaranஅ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுக் கொள்ள இலஞ்சம் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் டி.டி.வி. தினகரனுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் டெல்லி பொலிஸார் விடுத்துள்ள அழைப்பாணைக்கு அமைய நாளை நீதி மன்றில் ஆஜர் ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக தெரிவித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன்போது, இடைத்தரகராக செயற்பட்ட சுகேஷ் சந்திரசேகர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, இலஞ்சம் வழங்குவது குறித்து டி.டி.வி.தினகரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, டெல்லி பொலிஸ் உதவி ஆணையாளர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷாகல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரனின் வீட்டிற்கு சென்று இது குறித்த அழைப்பாணையை விடுத்துள்ளனர்.

முகப்பு
Selva Zug 2