திங்கள், 23 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி. வழக்கு

jvvpஅரசாங்கத்திற்கு எதிராக மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பாக வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி.யின் மேல் மாகாணசபை உறுப்பினர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வழக்குத் தொடர்வது குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டும். குற்றவியல் சட்டம் 298ன் அடிப்படையிலேயே அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.

மீதொட்டமுல்ல அனர்த்தம் ஒர் இயற்கை அனர்த்தமல்ல அது ஓர் கொலையாகும். குப்பை மேட்டின் அபாயம் குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதனை நகரசபை நிர்வாகமும் அரசியல்வாதிகளும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் உதாசீனம் செய்துள்ளன” என சுனில் வட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2