ஞாயிறு, 25 ஜூன் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

போராடினாலே தீர்வு –வடக்கு முதலமைச்சர்!

C.V.Vigneswaranகேப்பாபுலவு உள்ளிட்ட மக்கள் போராட்டங்கள் எதுவும் முடிவின்றி நிறுத்தப்படக்கூடாதென வடக்கு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.அவ்வகையினில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
கேப்பாபுலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடிய போது இதனை வலியுறுத்தியிருந்தார்.
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 51 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கும், வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பபொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
தமது காணிகளுக்குள் இரண்டு வீடுகளை மாத்திரமே இராணுவத்தினர் அமைத்துள்ளதாகவும், குறிப்பிட்டளவு காணிகளை இராணுவத்தினர் விடுவிக்க முடியாது என குறிப்பிடுவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என மக்கள் இதன்போது ஆதங்கம் வெளியிட்டனர். இதுமாத்திரமன்றி இராணுவத்தினர் நீச்சல்தடாகங்களை அமைத்து தமது காணிகளில் சுகபோகங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ள தமது காணிகள் அனைத்தையும் விடுவித்தால் மாத்திரமே தமது போராட்ட இடத்தைவிட்டு வெளியேறுவோம் என நேற்றையதினம் இராணுவத்திற்கு தாம் தெரியப்படுத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போதே காணி விடுவிப்பு தொடர்பில் போராட்ட மூலம் மாத்திரமே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் எனவும் இராணுவம் ஏதோவொரு காரணத்தை குறிப்பிட்டு காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கவே விரும்புவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

முகப்பு
Selva Zug 2