ஞாயிறு, 25 ஜூன் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

பாண் வாங்க சென்ற குழந்தைக்கு நிகழ்ந்த சோகம்!

dethசம்மாந்துறை நிந்தவூர் 6 பிரதேசத்தில் பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் சிறிய ரக பாரவூர்த்தியில் சிக்குண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த வாகனத்தில் பாண் வாங்குவதற்காக வந்த பெண்ணொருவருடன் வந்த குழந்தையொன்றே இவ்வாறு வாகனத்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் வயது 1 வருடங்களும் 6 மாதங்களும் ஆகும்.

குழந்தை வாகனத்தில் சிக்குண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து படுகாயமடைந்த நிலையில் , நிந்தவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் நிந்தவூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் சிறிய ரக பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முகப்பு
Selva Zug 2