செவ்வாய், 25 ஏப்ரல் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance
may-1st

புதிய கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல்கள் ஆரம்பம்: மஹிந்த தேசப்பிரிய

mahinda-desapriya-புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற அரசியல் கட்சிகளைத் தனித்தனியாக அழைத்து நேர்காணல் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்து கொள்வதற்கு தற்போது 95 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அண்மையில் சில கட்சிகளின் நேர்காணல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதியும் எஞ்சிய கட்சிகளுக்கான நேர்காணல்கள் இடம்பெறவுள்ளன.

நேர்காணல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் அனுமதி தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்கு, கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்படும்” என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 64 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, 95 புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

முகப்பு
Selva Zug 2