திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

துன்பங்கள் வந்தாலும் போராட்டம் தொடரும்முள்ளிக்குளம் மக்கள்!

arjuna-பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யப்படும் வரை நிலமீட்பு போராட்டம் தொடரும் என முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 30 ஆவது நாளாகவும், மறிச்சிக்கட்டி பகுதியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றன.

தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டமும், முசலிப்பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் அபகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டமும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

அண்மையில் குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து, மேற்படி மாவட்டங்களில் அரச அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி கிராம மக்களுக்கு தொடர்ந்தும் பல்வேறு தரப்பினர் ஆதரவுகளை வழங்கி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2