ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

கோழித்திருட்டிலும் இலங்கை காவல்துறை!

srilanka_police_4.jpgதொண்டமனாறு வல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்து கோழிகளை திருட முற்பட்ட நபர் இலங்கை காவல்துறையை சேர்ந்தவரென்பது கண்டறியப்பட்டுள்ளது.எனினும் ஊர்ப்பொதுமக்களை கண்டதும் மோட்டார் சைக்கிளினை வீதியில் கைவிட்டு குறித்த காவல்துறை நபர் தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையினில் வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் பொதுமக்களினால் மீட்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் இரவு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கோழிகளை பிடிக்க ஒருவர் முற்பட்டுள்ளார். இதன் போது விழித்துக் கொண்ட அப் பகுதி இளஞர்கள் குறித்த நபரை கையும் மெய்யுமாக பிடிக்க முற்பட்டுள்ளனர்.இந்நிலையினில் திருடன் பிடிக்க முற்பட்ட இளஞர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளினை கைவிட்டு தப்பி சென்றுள்ளார். பின்னர் இது தொடர்பில் இரவு ரோந்து கடமையில் வல்வெட்டித்துறை காவல்துறைக்கு ஊர் இளைஞர்கள் தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மோட்டார் சைக்கிளினை மீட்டு; நிலையம் எடுத்து சென்றிருந்தனர். இந்நிலையினில் கைபெற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் நெல்லியடி காவல் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து காவல் உத்தியோகத்தரினுடையது என வல்வெட்டித்துறை காவல்; நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2