ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

காணி விடுவிப்புப்போராட்டங்களை முடக்க ரணில் முகவர்கள் முயற்சி!

இலங்கை படைகளது காணிஆக்கிரமிப்பினை நியாயப்படுத்தவும் போராட்டகாரர்களை பிளவுபடுத்தவும் தமிழரசுக்கட்சி முகவர்கள் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.இதன் பிரகாரம் கிளிநொச்சியினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை அரச காணிகளென படையினர் நினைத்துக்கொண்டிருப்பதாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் அவை பொதுமக்களது காணியென தெரிவித்ததை குறிப்பெடுத்து சென்றிருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளதுடன் இதன் மூலம் காணியை விடுவிக்க படையினர் தயாராக இருப்பதாக தெரிகின்றதெனவும் வியாக்கியானம் செய்துள்ளார்.

????????????????????????????????????

இதேவேளை தமிழரசுக்கட்சியின் ஊதுகுழல் ஊடகமும் தனியார் காணிகள் விடுவிப்பென செய்திகளை சுமந்திரனை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்து ஆளும் தந்திரத்துக்கு நாங்கள் பலிக்கடாவாக மாட்டோமென, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்பிலவு மக்கள், படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்ககோரி, படை முகாமுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 51ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்படுமென படைத்தரப்பினை மேற்கோள் காட்டி சுமந்திரனால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.அவ்வகையினில் முதல் கட்டமாக 110 ஏக்கர் காணியும் வீதியொன்றும் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எனினும், எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை. அவ்வாறு முழுமையாக விடுவிக்கப்படாது விட்டால் போராட்டம் தொடருமென, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள்; தெரிவித்துள்ளனர். இதேவேளை, படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட்டத்தை மேற்கொள்கின்ற போது, எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு பல சதி முயற்சிகள் நடைபெறுகின்றன என அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது முகவர்கள் ஊடாக எங்களிடையே பிரிவை ஏற்படுத்தும்நோக்கில் பகுதி பகுதியாக விடுவிக்கப்படும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அவரின் பிரித்தாழும் தந்திரோபாயத்துக்கு நாங்கள் ஒரு போதும் பலிக்கடாவாக மாட்டோம். எங்களது ஒருமித்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தை மேற்கொள்ளுவோமென, அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது உதவியாளர் தற்போது கேப்பாபுலவினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளினில் நிறுவிவைக்கப்பட்டுள்ள விகாரைகள்,ஹோட்டல் என்பவற்றினை கையடக்க தொலைபேசி மூலம் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.

முகப்பு
Selva Zug 2