ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

நெதர்லாந்தில் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி

நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா ஞாபகார்த்த உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 08-04-2017 சனிக்கிழமை டென்காக்  சூட்டமீர் என்னுமிடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை 10.00மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்வு ஆரம்ப நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பித்தன. வணக்க நிகழ்வில் கிட்டண்ணா உள்ளிட்ட பத்து வேங்கைகளுடன் கேணல் பொன்னம்மான் மற்றும் பிரிகேடியர் தமிழேந்தி ஆகியோருக்கும் வணக்கம் செலுத்தப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வளர்ந்தோருக்கான உதை பந்தாட்டத்தில்

3ம் இடம் அவுடன்போஸ் வி.கழகமும்
2ம் இடம் டென்கெல்வர்  வி.கழகமும்
1ம் இடம் பிறேடா      விகழகமும்

17வயதிற்குட்பட்டோருக்கான உதை பந்தாட்டத்தில்

3ம் இடம் ஸ்காகன்     வி.கழகமும்
2ம் இடம் தமிழ் ஸ்ரார்  வி.கழகமும்
1ம் இடம் டென்கெல்வர்  வி.கழகமும்

பெற்றுக் கொண்டன.  வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிப் பதக்கங்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டு சுமார் 16.30மணியளவில் அனைத்து நிகழ்வும் இனிதே நிறைவெய்தியது.

முகப்பு
Selva Zug 2