ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

அரசியலில் நான் இணைய மாட்டேன் : சமல் ராஜபக்ச

samal rajapaksaமுக்கியமான பதவியை பெற்றுக்கொண்டு தான் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதாக பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு நான் சென்றது பெரிய கதையாக பேசப்படுகிறது.

நான் அமைச்சு பதவிகளை பெற அங்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் நான் மாநாட்டுக்கு சென்றேன்“ என சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

முகப்பு
Selva Zug 2