ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக புதனன்று விவாதம்

zeid-raad-husein-ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்த எழுத்துமூல அறிக்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இதன்போது விவாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.

அதன்பின்னர் பதிலளிக்க உரிமை உள்ள நாடு என்ற வகையில் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஹுசைனின் உரைக்கு பதிலளித்து உரையாற்றுவார்.

தொடர்ந்து மனித உரிமை உறுப்புநாடுகளும் உறுப்புரிமை அற்றநாடுகளும் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாடுகளை வெளியிடவுள்ளன.

முகப்பு
Selva Zug 2