திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

ஜனாதிபதி, பிரதமருடன் சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று பேச்சு   !

chang-wanquan-400-seithyமூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் சென்ங் வங்கூவான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இன்று சந்திக்கவுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் 21 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், நேற்று இரவு நாட்டை வந்தடைந்ததுடன், இன்றிலிருந்து அரசின் பல்வேறு உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.

இச் சந்திப்புகளின்போது, இலங்கை – சீனாவுக்கிடையிலான பாதுகாப்பு வலயம் குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலங்களில் ஆசிய நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துக் காணப்படுவதுடன், குறிப்பாக இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் எனும் போர்வையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2