ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

இந்திய முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர்!

akathiஇந்திய முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்கள் இந்த மாதம் 23 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னெடுத்துள்ள திட்டத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு 20 குடும்பங்களைச் சேர்ந்த, 36 பேர் நாடு திரும்பவுள்ளனர்.

நாடு திரும்பும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் உணவு ஆகிய செலவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2