ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும் : பாக்கியசோதி

pakkiyasothiபோர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்காக கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டுமென நல்லிணக்க செயலணியின் செயலாளரும் சிவில் செயற்பாட்டாளருமான பாக்கியசோதி சரவணமுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்று கோரவுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் இலங்கையில் கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டுமெனவும் அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் பாக்கியசோதி சரவணமுத்து கோரிக்கை விடுக்கவுள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நடைபெறவுள்ள கூட்டமொன்றில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுக்கவுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்களான நிமல்கா பெர்னாண்டோ, சிவச்சந்திரன் சரோஜா மற்றும் பென்சிலா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

முகப்பு
Selva Zug 2