செவ்வாய், 17 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

வலுக்கின்றன தமிழரசின் சதிக்கெதிரான குரல்கள்!

சர்வதேச நீதி விசாரணை தொடர்பினில் தமிழரசுக்கட்சியின் பித்தலாட்டம் மக்களிடையே உச்சபட்ச சீற்றத்தை தோற்றுவித்துள்ள நிலையினில் பங்காளிக்கட்சிகளும் மக்களிற்கு உண்மையினை தெளிவுபடுத்த முனைப்புகாட்டிவருகின்றன.சுவரொட்டிகள்,ஊடக அறிக்கைகள் என அவை மும்முரமாக செயற்பட்டுவருகின்ற நிலையினில் முதலமைச்சரும் கண்டனங்களை பதிவு செய்ய தொடங்கியுள்ளார்.

இந்நிலையினில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசாரணை அறிக்கையை இதுவரை வெளியிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள வடக்கு முதலமைச்சர் குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தால் பொது மக்களின் உண்மையான துன்பங்களை ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருக்க கூடிய சூழல் உருவாகியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று 28 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது.

எதுவித தீர்வுமின்றி தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு இன்று முற்பகல் விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். குறித்த போராட்டத்தை இருபத்தெட்டு நாட்களாக தொடரவிட்டமை தவறானது என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்த விடயத்தில் அக்கறையீனமாக செயற்படும் அரசாங்கம், குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

முகப்பு
Selva Zug 2