புதன், 22 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

கேப்பாபிலவு போராட்டத்திற்கு தீர்வு – யாழ்.ஆயர் உறுதி!

Jaffna-bishop-1220முல்லைத்தீவு  கேப்பாபிலவு  மக்களது அறவழிப் போராட்டம் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் பேசப்பட்டு தீர்வுகிடைக்க வழியேற்படுத்தப்படுமென யாழ்.ஆயர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்.ஆயர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:-

முல்லைத்தீவு  கேப்பாபிலவு  பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம் 18ஆவது நாளாக எந்த முடிவுமின்றி தொடர்வது மனவருத்தம் தருகிறது. முல்லைத்தீவு  கேப்பாபிலவு  பிலக்குடியிருப்பில்  வான் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி விடுவிக்கப்பட வேண்டுமென 18 நாட்களாக மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேவேளை புதுக்குடியிருப்பின் மையப்பகுதியில்  பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள 19 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டுமென 14 நாட்களாக மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தம் சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை நகரப்போவதில்லை என இம் மக்கள் மிக உறுதியாக இருப்பது எல்லாவகையிலும் நீதியானதும் நியாயமானதுமாகும். 30 ஆண்டு கால கொடிய போர் முடிவடைந்து  7 ஆண்டுகளுக்கு மேலாகியும் நல்லெண்ண அரசு தாமாகவே செய்திருக்க வேண்டிய ஒரு பணியை மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தி 17 நாட்களாகியும் அரசு எந்த கவனமும் இன்றி இருப்பது கண்டிக்க தக்கது.

இதற்கான தீர்வினைக் காண்பது தலைபோகிற காரியமல்ல.  நல்லெண்ண அரசு உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண விரைந்து செயற்பட வேண்டும் என  அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பேரால் அரசிற்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இலங்கையின் அனைத்து  மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும் கூடவுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அர்வில்   பெப்பிரவரி மாதம் 22ஆம் திகதி இது பற்றி விரிவாகப் பேசி தீர்வு ஒன்றினை அடைய நிகழ்ச்சி நிரலில் நேரம்  ஒதுக்கும்படி நாம் ஏற்கனவே வேண்டி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ் மறைமாவட்டத்தில் நடந்தேறிய மேயப்புப்பணி மகாநாட்டிலும் போரினால் காணமற் போனோர் மற்றும் மீள்டியேற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகின்றோமெனவும் யாழ்.ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2