ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

சம்பந்தன், சுமந்திரன் அறிவிப்பு கூட்டமைப்பின் கருத்து அல்ல!

தமிழ் தேசியக்கூட்டமைப்பினை பிழையான பாதையில் கொண்டு சென்று அதனை சின்னாபின்னமாக்கிய அவப்பெயர் அதன் தலைவரான இரா.சம்பந்தனையே சேரப்போகின்றதென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமான சுரேஸ்பிறேமச்சந்திரன்.suresh premachanran01

யாழ்.ஊடக அமையத்தில் அவர் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய பத்திகையாளர் மாநாட்டில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பலர் இருந்தனர். ஆனால் அண்மைக்காலமாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளது ஒப்புதல் ஏதுமின்றி தன்னிச்சையாக சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் கூட்டமைப்பு பிரதிநிதிகளாக கருத்துக்களினை வெளியிட்டுவருகின்றனர். இத்தகைய கருத்துக்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களேயன்றி கூட்டமைப்பின் கருத்துக்களல்ல என்பதை மீண்டும் அனைவரிற்கு சொல்லிக்கொள்ளவிரும்புவதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தக்குற்ற விசாரணைகள் தேவையில்லையென இலங்கை ஜனாதிபதி மைத்திரி முதல் சம்பந்தர் இதுவரை நம்பிக்கை கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வரையில் திரும்ப திரும்பக்கூறிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இலங்கைக்கு ஜநாவில் மீண்டுமெர்ரு காலநீடிப்பு எதற்கு என்பது புரியவில்லை. உண்மையில் அது இலங்கையை பாதுகாப்பதற்கான ஒரு காலநீடிப்பாகவே பார்க்கப்படவேண்டும்.

இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டத்தில் இலங்கை அரசிற்கு காலநீடிப்பு வழங்குவதனை ஈபிஆர்எல்எவ் முற்றாக நிராகரித்திருந்தது. டெலோவும் அதே நிலைப்பாட்டை தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது.புளொட் தலைவர் சித்தார்த்தனும் காலநீடிப்பினை நிராகரிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இரா.சுமந்திரனும் சம்பந்தனும் ஆதரவு வழங்குவதென்பது அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடாகவே இருக்கமுடியுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2