ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

கேப்பாபுலவு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்–தமிழ் மக்கள் பேரவை!

tamilmakalpaathivuகேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களது காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் சுயமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த போராட்டம் 18ம் நாளாக தொடர்வதுடன், நான்கு நாட்களாக சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மக்களின் நிலவிருப்பு போராட்டத்தின் குறியீடாக கேப்பாபுலவு மக்களின் போராட்டம் மாறி இருக்கிறது.
சர்வதேசத்தை நம்பவைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் முன்னாள் அரசாங்கத்தின் அணுகுமுறையையே தற்போதைய அரசாங்கமும் பின்பற்றி வருகிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சினையை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமுகங்கள் தலையிட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
முகப்பு
Selva Zug 2