புதன், 22 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!

puthalam2சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக முந்தல் பிரதேச செயலாளர் ஏ.எம்.சீ.எம்.பிரேமசூரியவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொலைபேசி ஊடாக தகவல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.puthalam1

குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளர் முந்தல் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதுடன், பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கமைய முந்தல் பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் எஸ்.ஜே.பி.ஜனக பெர்ணான்டோ தலைமையிலான அதிகாரிகளும், முந்தல் பொலிஸாரும் இணைந்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.puthalam

இதன்போது, மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை முந்தல் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அத்துடன், சட்டவிரோத மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2