திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்.

இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர்.

இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (சனிக்கிழமை) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளார்.

நாளை இலங்கைவரும் வெளியுறவு செயலாளர் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விஜயத்தின் போது இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள், திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என்பன குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், துறைமுக நகர் திட்டம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் போன்ற பாரிய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கில் எதிர்வரும் மார்ச் மாத்தில் சீனாவின் உயர் மட்ட குழுவும் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2