திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

கேப்பாபுலவுக்கு தீர்வு இல்லையேல், போராட்டம் வெடிக்கும்.

மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் பூதாகாரமாக வெடிக்கும்   என மக்கள் விடுதலை முன்னணியின் வடக்கு மாகாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இம்மக்கள் தங்கள் பிரச்சினையை ஒரே இரவில் தீர்க்குமாறு கோரவில்லை. கடந்த எட்டு வருடங்களாக பொறுமையாக காத்திருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கமே அறிவித்தது. ஆனால் அவ்வாறு விடுவிக்கப்படாத நிலையிலேயே மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை இத்தருணத்தில் நாம் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தின் கூடுதல் கவனத்திற்கு கொண்டுவர தீர்மானித்துள்ளோம். இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படாவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் பூதாகாரமாக வெடிக்க வாய்ப்புள்ளது.

எனவே நல்லாட்சி அரசாங்கம் இது தொடர்பில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.

முகப்பு
Selva Zug 2