திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

தகவலறியும் சட்டத்தை அறிய கொழும்பு செல்லும் அதிகாரிகள்!

RTI Sri Lankaவடக்கில் தகவல் அறியும்  உரிமை சட்டத்தை அமுல்படுத்த பெருமளவு அதிகாரிகள் பேரூந்து பிடித்து கொழும்பிற்கு சென்றுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல்படுத்துவது பற்றிய நிகழ்வில் பங்கெடுக்கவே நேற்று வியாழக்கிழமை வடமாகாணசபை அதிகாரிகள் படையெடுத்து சென்றுள்ளனர். இதனால் வடமாகாணசபையின் பெரும்பாலான திணைக்களங்கள் அமைச்சுக்கள் அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி போயுள்ளன.

இதனிடையே தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் பெரும்பாலான அதிகாரிகள் போதிய விளக்கமற்றிருப்பதுடன் திண்டாடியும் வருவதாக ஊடகவியலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டம் தொடர்பில் அதிகாரிகளே விளக்கமற்றிருக்கும் நிலையில் சாதாரண மக்கள் சரியாக விளங்கிக்கொள்வதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும் என  பலராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு தகவல் அறியும் உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை பெரும்பிரச்சாரமாக சர்வதேசத்தின் முன் கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2