புதன், 22 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

ஐரோப்பிய பாராளுமன்றம் முன்“எமது நிலம் எமக்கு வேண்டும்”கவனயீர்ப்புப் போராட்டம்!

aIMG_8350“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு 15.02.2017 அன்று நடைபெற்றிருந்தது. ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் கணிசமான ஸ்ராஸ்பூர்க் வாழ் தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்ததுடன்,aIMG_8394 சிங்கள பேரினவாத அரச படைகளைத் தமிழீழ நிலப்பரப்பிலிருந்து உடனடியாக வெளியேற்றக் கோரியும், 69 வருடங்களாகத் தொடரும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ உணர்வாளர்கள் தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.aIMG_8414

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்த இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு பிரான்ஸ் பத்திரிகையும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.அதேநேரம் 16.02.2017அன்று ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுக்கு பொறுப்பான ஜீன் லம்பேர்ட் அவர்களுடனான சந்திப்பில் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் சீரற்ற காலநிலையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதையும், சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து அந்த மக்களுக்கு சாதகமான பதில் இது வரையிலும் கிடைக்கவில்லை என்பதையும் மற்றும் GSP+ வரிச்சலுகை நிறுத்தக்கோரியும் எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கபட்டது.

aIMG_0929

 

முகப்பு
Selva Zug 2