ஞாயிறு, 23 ஏப்ரல் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance

ஜெயலலிதா ஈழத்துமக்களின் மீது ஆதரவு போன்று ஏனைய தலைவர்களும் செயற்பட வேண்டும்!

தமிழகத்தில் யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படுவார்களாயின் அவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் ஆழமான கரிசனை கொண்டவர்கள் எனத் தெரிவித்த கஜேந்திரகுமார், இதனை மீறி செயற்பட்ட ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தூக்கியெறியப்பட்டனர் என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கையின் இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டு, சுயநிர்ணயத்தின் அடிப்படையில் மட்டும்தான் தீர்வு கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு தமிழீழம் வழங்கவேண்டுமென செயற்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்களின் அமோக ஆதரவு இருந்ததென சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், அதேபோன்று ஏனைய தலைவர்களும் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

முகப்பு
Selva Zug 2