திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

அன்றும் இன்றும் – ஈழ அரசியல்

சிவசிதம்பரம்1986 ஆம் ஆண்டுகொழும்பில் இந்திய ஏற்பாட்டில் தமிழர் இனப்பிரச்சனை தீர்விற்கென வட்டமேசை மாநாடு. சென்னையில் முகாமிட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அதற்காக கூடி பேசினர். என்ன கூடிப் பேசினார்கள் என்பதை அறிய வழமை போல் கூட்டணித்தலைவர் சிவசிதம்பரம் வீட்டிற்கு சென்றேன். அப்போது தான் கூட்டத்தில் இருந்து திரும்பியிருந்தார். அவருடன் சம்பந்தரும் இருந்தார். சிவா சம்பந்தருடன் எதோ காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். நான் போனதும் நிறுத்திவிட்டார். சிவா என்னிடம் எதையும் மறைப்பதில்லை. சம்மந்தர் போனதும் என்ன விடயம் என்றேன்.

இல்லை யார் யார் போவது என்று தீர்மானித்த போது தேவைக்கு அதிகமாக யாரும் போகக்கூடாது என்று நான் சொன்னேன். அவ்வாறு போனால் பாதுகாப்பு என்ற போர்வையில் இலங்கை அரசிற்கு கடமைப்படுவதாக அமைந்துவிடும். அது எமது பேரம் பேசும் சக்தியை பாதித்துவிடும் என்றார். சரி தான் அதற்கு என்ன என்றேன்

கூட்டத்தின் போது அங்கிருந்த மங்கையற்கரசி ஒரு துண்டை சிவாவிடம் வழங்கியுள்ளார். அதில் நான் வரூவதை எதிர்க்கவேண்டாம் என்றிருந்தது. சிவா அதை ஏனையவர்களிம் கொடுத்துள்ளார். இறுதியில் அது அமிர்தலிங்கத்தை சென்றடைந்துள்ளது. அனைவரும் அமிரை பார்த்துள்ளனர். அமிர் அமைதியாக இருக்க போவோர் பட்டியலில் இடம் பிடித்தார் மங்கையற்கரசி. தாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் போது அவர் மட்டும் நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பதால் அவருக்கு தனித்து பாதுகாப்பு வழங்கப்படும். அவ்வாறு சிங்களத்திற்கு கடமைப்படுவதை அமிர் தவிர ஏனையவர்கள் விரும்பவில்லை.
தான் அருகில் இருந்தால் தான் கணவருக்கு உச்சம் என சாத்திரி சொல்லியிருப்பதாக அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் மங்கையற்கரசி. இது அன்றைய நிலைப்பாடு.

இன்று தன் இருப்பிற்கென சிங்களம் கிளைமோர்கொலைமுயற்சி என மர்மக்கதைககை அரங்கேற்றும்….. அதில் கதாபாத்திரத்தை நாங்களே ஏற்று நடிப்போம். அதற்கு பிரதியுபகாரமாக அதியுட்ச பாதுகாப்பை சிங்களத்திடம் இருந்து பெற்றுக் கொள்வோம்இது இன்றைய அரசியல்…. இந்த மர்ம தொடர்கதை குறித்த விரிவான அலசலுக்கு காத்திருங்கள்…..
 
நேரு குணரட்னம்
முகப்பு
Selva Zug 2