வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

ஈழத்து உணர்வோடு சிறப்பாக இடம்பெற்ற பிறம்ரன் பொங்கல் விழா 2017

பிறம்ரன் தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் மரபுத் திங்கள் மற்றும் பொங்கல் புத்தாண்டு விழா தை மாதம் இரண்டாம் வாரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்தி சிறீஸ்கந்தராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பிறம்ரன் பொங்கல் விழா சிறந்த கலை நிகழ்வுகள் மற்றும் தமிழ் உணவு வகைகளுடன் கூடிய விழாவாக மட்டுமன்றி தாயக உணர்வுடன் நடந்தேறிய ஒரு விழாவாகவும் அமைந்தது பாராட்டிற்குரியது.Bramton pongal vila 01

ஈழப் போரின் அதிகபட்ச வடுக்களைச் சுமந்துகொண்டு உடல்-உள சுமைகளோடு தொடர்ந்து வாழ்வதா சாவதா என்ற மனஅழுத்தங்களுடன் வாழும் ஈழத்திலுள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட உறவுகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்களது ஆதாரத்திற்கு உதவுவதில் பிறம்ரன் தமிழ் ஒன்றியம் தொடர்ச்சியாக உதவி வருவது அனைவரும் அறிந்தது. வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான வகையில் சென்றடைகிறதா என்பது ஏன் முக்கியமானது என்பதை பிரதம விருந்தினர் கௌரவ சாந்தி சிறீஸ்கந்தராஜா தனது உரையில் சிறப்பாக விளக்கியதுடன் உயிரிழை அமைப்பு மிகுந்த அர்ப்பணிப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுகிறது என்றும் பாராட்டினார்.Bramton pongal vila 02

இந்த நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொண்டு பிறம்ரன் தமிழ் ஒன்றியத்தின் மூலம் உயிரிழை அமைப்பினூடாக தாராளமாக நிதியுதவி வழங்கும் கொடைவள்ளல்களைப் பாராட்டி உரையாற்றிய பிரதம விருந்தினர் ஈழத்தின் தற்போதைய சூழல் மக்கள் தொடர்ந்தும் எதிர்நோக்கிவரும் சவால்கள் அரசியல் சூழ்நிலை போன்றவற்றை மிகவும் தெளிவாகவும் யதார்த்தமாகவும் விளக்கினார். அவரது உரையின் ஒலி-ஒளி வடிவத்தை இங்கே இணைத்துள்ளோம். ஈழஉணர்வுள்ள அனைத்துத் தமிழர்களும் அவரது உரையைக் கேட்பது மிகவும் அவசியம்.Bramton pongal vila 03
முள்ளி வாய்கால்ப் பேரழிவிற்குப் பின்னால் உருவெடுத்த அமைதி பற்றிய பெரும் பேச்சும், நல்லிணக்க கோசங்களும் எந்தவித பலனுமற்றுப் படிப்படியாகக் குறைந்து ,மறந்து மறைந்து போகும் தருணம் இது. தவறுகளில் இருந்து எவரும் எதையும் கற்றுக் கொள்ளவுமில்லை.இத்தகு தருணத்தில் அரச தேசிய அமைப்புகளைக் காட்டிலும் எம்மக்களுக்கான முன்னோடியாக இத்தகு மன்றங்கள் ஆற்றும் சேவை மகத்தானவையாகும்.Bramton pongal vila 04

கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வில் உரையாற்றி இருந்தனர். பேச்சாளர்கள் அனைவரும் கனடாவின் வளர்ச்சியில் கனடியதமிழர்களின் காத்திரமான பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.Bramton pongal vila 04 Bramton pongal vila 05 Bramton pongal vila 06 Bramton pongal vila 07 Bramton pongal vila 08 Bramton pongal vila 09 Bramton pongal vila 10

முகப்பு
Selva Zug 2