வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

அவுஸ்ரேலியா பாராளுமன்றத்தில் ஈழத்து கலைஞன் – காவியா

ஈழத்து கலைஞர்கள் எமது வலிகளை உலகில் உள்ள அனைத்து அரசிற்கும் தெரியப்படுத்துவதற்கு கலையினை ஒரு எடுகோளாக  எடுத்துசெல்கின்றார்கள். எமது நோக்கம் எமது வலிகளை கலை வடிவில் எடுத்து சென்று உலகின் உள்ள மக்களின் மனச்சாட்சியினை தட்டி எழுப்பி எமக்கான நீதியினை பெற்றுக்கொள்வதே ஆகும். அந்த வகையில் தமது மேலான கலையின் மூலமும் நடனத்தின் மூலமும் அவுஸ்ரேலிய பாராளுமன்றத்தை கண்ணீர் கடலில் மூழ்கவைத்து எமது நியாயமான அபிலாஷைகளை எடுத்து சொல்லி இருக்கின்றார் ஒரு கலைஞர். அவ்வாறு எமது அபிலாசைகளை எடுத்து சொன்ன கலைஞர் யார் தெரியுமா? ஆம் அவர் வேறுயாருமல்ல நிக்சன் சர்மா அவர்கள் தான்.Australia Paliment 06

இன்றைய பொழுதில் ”முந்தி முந்தி விநாயகரே” என்ற பாடலுடன் தனது நடனத்தை ஆரம்பித்த நிக்சன் சர்மா முறையே வேறு சில தாயக பாடல்களையும் இணைத்து ”எப்போ விடுதலை” என்ற கரு பெற ஒரு   நடனத்தை சுமார் 12 நிமிடங்கள் ஆடியிருந்தார். இவரது நடனத்தில் இடம்பெற்ற பாடல்களில் காணாமல் போனோர் பற்றிய பாடல், இறைவணக்க பாடல், எழுச்சி பாடல் என்பவை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.  Australia Paliment 05மேலும் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரி சிறிசேன ஆகியோர் அவுஸ்ரேலியாவிற்கு வருகை தந்திருந்த இந்த நேரம் அவுஸ்ரேலிய முக்கிய கட்சிகளான லிபரல், லேபர் ,கிறீன் ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். Australia Paliment 04 Australia Paliment 03 Australia Paliment 02 Australia Paliment 01

முகப்பு
Selva Zug 2