வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

உங்கள் சாக்கடை அரசியலால் நாம் வீதியில்! வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

வடமாகாணசபை சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைத்தப்பட்டுள்ளது.Against Sathiyalingam Demonstration 01

இன்று புதன்கிழமை வவுனியா கந்தசாமி கோவிலுக்கு முன்னாக ஒன்றுதிரண்ட காணாமல் போனோரின் உறவுகளால் இவ்வார்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.Against Sathiyalingam Demonstration 02

காணாமல் போனோரின் உறவினர்களால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் உருவப்படத்திற்கு தீயிட்டு கொளுத்தி கண்டனம் வெளியிடப்பட்டது.  Against Sathiyalingam Demonstration 03

இந்த சம்பவத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் எதிர்ப்பு வெளியிட்டதற்கும் விசமிகளின் செயற்பாடு எனக் கூறியதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே, காணாமல் போனோரின் உறவினர்களால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.Against Sathiyalingam Demonstration 04

சிறீ அரசுக்கு எதிராக தீர்மானம் போட முடியாத ஆண்மை கெட்ட வவுனியா தமிழரசுக் கட்சிக்காரரே வாய்ச்சொல் வீரர் நீங்களே, ஊழல் விசாரணை கமிட்டியில் ஆஜராகி முதலில் உன்னை யோக்கியம் என நிரூபி, சம்பந்தனுக்கு விசுவாசம் காட்டுவதற்காக சத்தியலிங்கம் நீ எங்களை விமர்சிப்பதா?, உங்கள் சாக்கடை அரசியலால் நாங்கள் வீதியில் என்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.Against Sathiyalingam Demonstration 05

முகப்பு
Selva Zug 2