செவ்வாய், 25 ஏப்ரல் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance
may-1st

அமைச்சர்கள் மீதான விசாரணை பரகசியம்?

Northern Provicial Council Ministerவட மாகாண அமைச்சர்களிற்கெதிரான முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க ஆட்கள் தயார்படுத்தப்பட்டு அனுப்பப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வகையில் இன்று புதன்கிழமையும் விசாரணைகள் தொடர்கின்ற நிலையில் நேற்றைய தினம் மட்டும் 14 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற இருநீதிபதிகள் மற்றும்  ஓய்வு பெற்ற யாழ்.அரச அதிபர் க.பத்மநாதன் தலைமையில் விசாரணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.

யாழ்.பொதுநூலகத்தில் தொடரும் விசாரணையில் சாட்சியமளித்தவர்கள் தவிர வேறு எவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

எழுத்துமூல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களே விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்வகையில் நேற்றைய தினம் 14 பேர்  சாட்சியம் அளித்துள்ளனர்.

இதனிடையே வடமாகாணசபையின் சுமந்திரன் அணியை சேர்ந்தவர்கள் குறித்ததொரு அமைச்சரிற்கு எதிராக வாக்குமூலமளிக்க ஆட்களை ஏற்பாடு செய்து அழைத்துவந்திருந்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகப்பு
Selva Zug 2