திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

காவல்துறைக்கும் பிணையில்லை!

police-lankaசுன்னாகம் பகுதியில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை காவல்துறையினருக்கு பிணை வழங்க இலங்கை நீதிமன்றம் மறுத்துள்ளது. பொய்யான திருட்டு குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு இலங்கை காவல்துறையினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கிலேயே பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தினால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 காவல்துறையினர் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு எதிரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. தமிழரான மற்றுமொருவர் நபர் வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் எற்படும், வழக்கு நடவடிக்கைகளில் தலையீடு ஏற்படும், சுதந்திரமாக நீதி விசாரணை செய்ய முடியாத நிலைமை ஏற்படும். எனவே, இரண்டு நீதிமன்றங்களிலும் சிவில் சாட்சிகள் சாட்சியமளித்து முடியும் வரை இவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருநத எதிரிகளான 7 காவல்துறையினருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சரவணபவனின் ஆதரவாளரான குறித்த இளைஞன் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இவர்களால் கண்டுகொள்ளப்படவில்லையென ஏறடகனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.

முகப்பு
Selva Zug 2