திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

சுன்னாகம் நிலத்தடி நீர்பற்றி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

well-oil.jpgசர்ச்சைக்குரிய சுன்னாகம் நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பினில் அறிக்கை சமர்ப்பிக்காது இழுத்தடிக்கப்படுவதாக நீதிமன்று குற்றஞ்சாட்டியுள்ளது. அப்பகுதியிலுள்ள நிலத்தடி நீரினை குடிக்கலாமா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை முறையான அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அது தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர் மன்றில் நேற்று முன்னிலையாகியிருந்தனர்.

சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரினை குடிக்கலாமா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை முறையான அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதவான் ஏ.யூட்சன் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய இதுகுறித்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.
முகப்பு
Selva Zug 2