செவ்வாய், 25 ஏப்ரல் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance
may-1st

வன்னிப் பகுதிகளில் ஆசிரியர் தமக்கான இடமாற்றத்தினை வழங்குகோரி போராட்டம்

protest_new-450x291வன்னிப் பகுதிகளில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர் தமக்கான இடமாற்றத்தினை வழங்குகோரி கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தினில் ஈடுபட்டனர்.

வன்னிப்பகுதிக்கு கடந்த 2011-07-29ம் திகதியிடப்பட்ட அமைச்சின் நியமனக்கடிதத்தின் பிரகாரம் 5 ஆண்டுகால சேவையினை நிறைவு செய்துள்ளமையினால் வலய மட்ட இடமாற்றம் வழங்கப்படவேண்டும் எனக்கோரியே மேற்படி கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை நிறைவேற்படாதமையினையடுத்து செயலாளரின் அலுவலகத்திற்கான பாதையினை மூடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுன் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உரையாடியவேளையில் தமது சேவையினை தரக் குறைவாகப் பேசியதாக கூறி பலத்த சர்ச்சையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உரையாடியபோது வட மாகாணத்தில் பணிபுரியும் ஆசிரியர்களிற்கான சேவைக்காலம் 6 ஆண்டுகள் என்பது மாகாண சபையின் தீர்மானமும் இடமாற்றக் புழுவின் தீர்மாணமும் ஆகும் எனவே இதனை நாம் தனித்து மாற்றம் செய்யமுடியாது .

அதன் பிரகாரம் ஆறு ஆண்டுகள் முடிந்ததும் உங்களிற்கான இடமாற்றம் வழங்கப்படும் . அதன்பால் 2018 ஜனவரி முதல் இடமாற்றம் வழங்கப்படும் எனக் கடிதம் தரலாம் ஏனெனில் அக்காலப் பகுதியிலேயே அங்கு பதிலீட்டு ஆசிரியர்களை அனுப்ப முடியும் என வாக்குறிதியளித்த வேளையில் அவ்வாறானால் முதல் இருந்த செயலாளர் இவ்வாறானதொரு கடிதத்தினை எதற்கு வழங்கினார் எனக்கேட்டு கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தினை வீசி எறிந்தார்.

இவ்வாறு சுற்று நிரூபத்தினை ஆசிரியர் வீசி எறிந்தமையினால் சினம் கொண்ட செயலாளர் பதில் ஏதும் அளிக்காது விலகிச் சென்றார்.

முகப்பு
Selva Zug 2