வியாழன், 19 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

தனி அறையில் வீரவன்ச!

vimal_weeravansa.jpgவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு மகசீன் சிறையின் ஈ அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஈ அறையில் கிட்டத்தட்ட 50 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவன்சவின் பாதுகாப்பிற்காக ஈ சிறைச்சாலை தொகுதியில் தனியான அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச போன்றோர் இந்த அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட 40 வாகனங்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைக்காக பயன்படுத்தியமையினால் அரசாங்கத்திற்கு 91 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2