சனி, 25 பிப்ரவரி 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
Journalist_1

வர்த்தமானியில் தகவலறியும் உரிமைச் சட்டம்

Low.crimeதகவலறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி 03ம் திகதி வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளது.

ஊடகத்துறை அமைச்சர் கயன்த கருணாதிலக இதனைக் கூறியுள்ளார்.

அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின் ஒவ்வொரு பிரஜைக்கும் தமக்கு தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு தகவல்களை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்களினதும் அதிகாரிகளையும் ஒரிடத்திற்கு அழைத்து நியமனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் இச்செயற்பாடு ஆரம்பமாகும் என்று அமைச்சர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முகப்பு
Selva Zug 2