திங்கள், 20 பிப்ரவரி 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
Journalist_1

மைத்திரி அரசுடன் இணைய விரும்பவில்லையாம்! – ஈபிடிபி கூறுகிறது

DAKLASநல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என ஈபிடிபி தெரிவித்துள்ளது.

அமைச்சு பதவிக்கு விரும்பி நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை தாம் விரும்பவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியாகும் செய்திக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அதற்கு வெளியில் இருந்து அரசியல் செய்வதனையே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஆதரவளித்தாலும், இணைந்து செயற்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2