வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

தமிழின வரலாறு சுமந்திரன், சம்பந்தனுடன் ஆரம்பமாகவில்லை – சட்டத்தரணி கரிகாலன்

தமிழின வரலாறு உன்னோடு (சுமந்திரன்) அல்லது சம்பந்தன் ஐயாவோடு தான் ஆரம்பமானதாக இல்லை. ஆகவே, இத்தகைய கொட்டாவி விடுவது, வாயைத் திறப்பது, கொள்கைப் பிரகடனங்கள் செய்வதை நிறுத்துங்கள். சுமந்திரன் ஐயா ஓராண்டுத் தவணையை ஜெனீவாவுக்குக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். எங்கிருருந்து எடுத்துக் கொடுக்கிறீர்கள். உங்களுடைய மடியில் இருந்தா கொடுக்கிறீர்கள்? எங்கிருந்து கொடுக்கிறாய்? உனக்கு யார் இந்த உரிமையைத் தந்தது. என்று தந்தை செல்வாவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் பிரபல சட்டத்தரணிய கரிகாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று யாழ்பாணத்தில் இடம்பெற்ற தமிழாராய்சி மாநாட்டில் நினைவுப் பேருரையில் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-Karikalan 01

மறவர்களை, தமிழர்களைப் பலி கொடுத்திருக்கிறோம். இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வந்ததா என்றால்? இல்லை. வழக்கமாக இவ் நினைவுப் பேருரையில், அவர்களுடைய சாந்தி அடைய வேண்டும் என்று முடிப்பார்கள். சம்பிரதாயபூர்வமாக எப்படி சாந்தி அடைய முடியும். முடியுமா? எப்படி முடியும்? அவர்கள் கண்ட கனவு, எதற்காக தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்தார்களோ? எந்த அடக்கு முறைகளுக்கு எல்லாம் அவர்கள் அழிக்கப்பட்டார்களோ? அதே அடக்கு முறை தொடர்கிறதா இல்லையா?

இதை நாங்கள் நடத்துகிறோம் என்றால்? தமிழ் மக்களுக்கு மட்டும் நினைவுபடுத்துவதற்கு மாத்திரமல்ல, தமிழ் தலைமைகளுக்கும் நினைவூட்டுவதற்குமாகவே இவ் நினைவுநாளை நினைவு கூருகிறோம்.

தந்தை செல்வாவின் பெயரை வார்த்தைகளில் மாத்திரம் உச்சரித்துக்கொண்டு, உளமாற வேறு கனவுகளுடன் இருக்கின்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் தந்தை செல்வா சாதி, மத, பேதமற்ற, பிரதேச வேறுபாடுகளற்ற சமூதாயத்தை நிறுவப்பார்த்தார்.

மீண்டும் சில மிலேச்ச சக்திகள் மத ரீதியாக பிளவு படுத்துவதற்கு, இந்துக்கள், சைவர்கள், கிருஸ்தவர்கள், எனப் பிளவு படுத்துவதற்கு தலை எடுக்க முற்படுகின்றன. அந்த சக்திகளை வேரோடு அறுப்போம்.

சுமந்திரன் ஐயா ஓராண்டுத் தவணையை ஜெனீவாவுக்குக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். எங்கே இருந்து எடுத்துக் கொடுக்கிறீர்கள். உங்களுடைய மடியில் இருந்தா கொடுக்கிறீர்களா? எங்கிருந்து கொடுக்கிறாய்? உனக்கு யார் இந்த உரிமையைத் தந்தது. ஜெனீவாவில் வந்த தீர்மானங்கள் எல்லாம் குளறுபடி செய்தா வந்தது? இல்லை. தமிழினப் போராட்டம், தமிழின வரலாறு உன்னோடு (சுமந்திரன்) அல்லது சம்பந்தன் ஐயாவோடு தான் ஆரம்பமானதாக இல்லை. ஆகவே, இத்தகைய கொட்டாவிடுவது, வாயைத் திறப்பது, கொள்கைப் பிரகடனங்கள் செய்வதை நிறுத்துங்கள்.

தமிழினத்தின் எச்சசொச்சங்கள் இன்னும் இந்த உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தி, எங்களுடைய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலே, அழிந்த மடிந்து உக்கிப்போன அந்த உயிர்கள் எல்லாம் உணர்வுகள் இல்லாமல் இருக்கவில்லை. அந்த ஆன்மாக்களுக்கு இந்த உறுதி மொழிகளைக் கூறுகின்றோம். மீண்டும் போராடுவோம். தொடர்ந்து போராடுவோம் என்றால் சட்டத்தரணி கரிகாலன் அவர்கள்.

முகப்பு
Selva Zug 2