திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

மெல்போர்னில் தமிழர் விளையாட்டு விழா

ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 வீரர்களின் நினைவாக நடத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017” நாளை மெல்போர்னில் நடக்கிறது. Tamil-vilaiyattu-vizha-in-melbourneஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 பேரின் நினைவாக நடத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017” ஜனவரி மாதம் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிழக்கு புர்வுட் ரிசர்வ் (East Burwood Reserve) மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன. இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும் விற்பனைக்கு உள்ளன.

அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்று கூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைக்க ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முகப்பு
Selva Zug 2