திங்கள், 23 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

பிரித்தானியாவில் தமிழர் திருவிழா 2017

தமிழர் திருநாளன்று மாபெரும் பொங்கல் விழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியா   தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 

புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் தகவமைப்பை ‘தமிழால்’ நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில்  தைப்பொங்கல் பெருவிழா   Old Lyonian Sports Club ,74 Pinner View ,Harrow Ha1 4QF என்னும் இடத்தில் மிகச் சிறப்பாக நடை பெற உள்ளது. 

‘தை பிறந்தால் வழி பிறக்கும்!’ என்பது எம்மவர் வாழ்வில் முன்னோர்களால் விட்டுச் சென்ற முதுமொழி. இக்கூற்று வழியில் எம்மவர் வாழ்வுத் தளத்தில் புதிய நம்பிக்கை வாழ்வாதாரம் கிட்டடும்!

நீண்டு செல்லும் தமிழர் வாழ்வில் இயற்கையின் சீற்றத்தாலும் மானிடக் கொடூரங்களாலும் கண்ட அழிவுகள் பலவாயினும் அவற்றையும் கடந்து எதிர்கொண்டு வாழும் நம்பிக்கையூட்டும் நன்னாள் பொங்கல் நாள் !

பழையன கழிந்து புதியன புகட்டும்!

எல்லோருக்கும் இன்பம் பொங்கட்டும்!!

தைப்பொங்கல் – தமிழர்க்கு ஒரு நாள் – இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் !

” யாதும் ஊரே யாவரும் கேளிர் ”

இனிய பொங்கல் – புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து அனைவரும் வருக என அழைக்கிறோம்!

இவ் நிகழ்வில்   தமிழ் வார்தகர்களாகிய நீங்கள்  உங்களுடைய வியாபாரங்களை விளம்பரப்படுத்தவும், வியாபாரம் செய்வதற்கும் இடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்.

பிரித்தானியா   தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
தொடர்புகளுக்கு : 02033719313, 07541 302109

pongal - 2017

முகப்பு
Selva Zug 2