திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

மல்லாவியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு

arestமுல்லைத்தீவு – மல்லாவியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று(29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழி மூல தொலைபேசி முறைப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மல்லாவி, ஐயன்குளம், பளிங்கி ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் இந்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார், அனுமதி பெறாது சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள், குழு மோதல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் மொழி மூல முறைப்பாடுகளுக்காக 0766224949, 0766226363 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2